ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ஏ.டீ.எஸ்.எல் சேவையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக இன்று காலை முதல் பிற்பகல் வரை இணையச் சேவைகள் முடங்கிப் போயிருந்தது. மாங்குளத்துக்கும் வவுனியாவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் கண்ணாடியிழை (பைபர் ஒப்ரிக்ஸ்) தொடர்பில் ஏற்றபட்ட தடங்கல் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக ரெலிகொம் யாழ். பிராந்திய வட்டாரங்களிலிருந்து அறிய முடிந்தது. மதியமளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற தொழில்நுட்ப வல்லுநர் குழுவினால் பிற்பகல் அளவில் தடங்கல் சீா் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏ.டீ.எஸ்.எல் இணைய இணைப்புகள் இயங்கத் தொடங்கியது.

தடங்கல் ஏற்பட்ட நேரத்தில் இருந்து மொபைல் புறோட்பாண்ட் இணைப்புக்களையே வழமைக்கு மாறாகப் பலரும் பயன்படுத்தியதனால் மொபைல் புறோட்பாண்ட் இணைப்புக்களை பயன்படுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டது.

தடங்கல் சீா் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏ.டீ.எஸ்.எல் இணைய இணைப்புகள் இயங்கத் தொடங்கியதை அடுத்து பிற்பகலில் நிலைமை வழமைக்குத் திரும்பியது.