அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் சிகோரா. பறக்கும் கார் வாங்குவதற்காக கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பிரபல கார் தயாரிக்கும் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் முன்பணமாக செலுத்தியுள்ளார். மீதித் தொகையை கார் வாங்கும்போது செலுத்துவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அகமதாபாத்துக்கு அந்த காரை கொண்டு வருவதற்கான செலவு, வரிகள் உள்பட ரூ. 6 கோடி செலவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு சிகோரா தனது மனைவி மற்றும் 6 மாத குழந்தையுடன் டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கு விமானம் மூலம் செல்ல சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் அவரை அனுமதிக்கவில்லை. சிகோரா வாங்கிய விமான டிக்கெட்டில் விபரங்கள் சரியாக பதிவாகவில்லை என்பதால் அவரால் அந்த விமானத்தில் பயணிக்க முடியவில்லை. இதையடுத்து விமான டிக்கெட் கொடுத்த நிறுவனம் மீது ரூ. 21 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சிகோரா வழக்கு தொடர்ந்தார்.

இது ஒரு புரம் இருக்க, இனி சொந்தமாக விமானம் வாங்கிய பிறகுதான், விமான பயணம் மேற்கொள்வதாக சிகோரா முடிவு செய்தார். அதன்படி பறக்கும் காரை வாங்கிய சிகோரா. தற்போது அதை இயக்க பயிற்சி எடுத்து வருகிறார். இதற்கான லைசென்ஸ் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.