மகளின் கையடக்க தொலைபேசியில் ஆபாச காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்ததை அறிந்த தந்தை துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குருநாகல் கொக்கரெல்ல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஜனபாகம என்னும் கிராமத்தை சேர்ந்த ஜே.ஏ. சுகதபால(39) என்ற மூன்று குழந்தைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த நபரின் மகன் கல்வி கற்கும் பாடசாலை அதிபர் மேற்படி கையடக்கத் தொலை பேசியை பரிசீலித்த போதே மேற்படி காட்சிகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இது சம்பந்தமாக அம் மாணவியின் பெற்றோரை அழைத்த அதிபர் மகன் முன்னிலையில் வைத்தே அக் காட்சிகளை காண்பித்துள்ளார். அதில் இருந்த ஆபாச காட்சிகளை பார்வையிட்ட தந்தை வீட்டுக்கு வந்த பின் துப்பாக்கி ஒன்றால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொக்கரெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சித் விதாரன தலமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.