21 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்பிலிருந்து ஓமந்தை வரையான ரயில் சேவை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்போது கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை சேவையில் ஈடுபடும் ரயில் ஓமந்தை ரயில் நிலையம் வரை பயணிக்கத்தக்க வகையில் தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரை 10 கிலோ மீற்றர் தூரம் கொண்ட ரயில் பாதை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் ஒத்துழைப்புடன் ரயில் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதைக்கு 50 கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களத்தின் பிரதித் தலைமைப் பொறியியலாளர் ஏ. அமர துங்க தெரிவித்துள்ளார்.ஓமந்தை ரயில் நிலையம் வரையறுக்கப்பட்ட சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையு டன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தில் தனியார் நிறுவனமொன்றினால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது ரயில் நிலையம் இதுவாகும். ஓமந்தை ரயில் நிலையமும் தாண்டிக் குளத்திலிருந்து ஓமந்தை வரையான ரயில் பாதையும் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை போக்குவரத்து அமைச்சர் குமார வெல் கமவினால் திறந்துவைக்கப்படவுள்ளது.