அல் – கொய்தா இயக்கத்தின் முன்னாள் தலைவரான ஒசாமா பின்லேடனின் இளைய மகனான ஹம்சா பாகிஸ்தானின் அபோடாபாட்டிலுள்ள வீட்டில் தனது தந்தை அமெரிக்க படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டவேளை தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ஒசாமாவின் மூன்று மனைவிகளே இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இவர் அபோடாபாட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

எனினும் கொல்லப்பட்டது ஹம்சா இல்லையெனவும் அது அவரின் சகோதரரான (22) காலிட் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஹம்சா பின்லேடன் (19) அல் கொய்தா இயக்கத்தின் இளவரசராக வர்ணிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.