யாழ்ப்பாணம் வடமராட்சிக் கடற்பிரதேச நீர் தீடீரென சிவப்பு நிறமாக மாற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வடமராட்சி வடக்கு பிரதேச கடல் நீரே அவ்வாறு சிவப்பு நிறமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது. வடமராட்சி வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரம் வரை அவ்வாறு கடலில் சிவப்பு நிறமாக நீர் தென்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அச்செய்தியினை எமது யாழ். செய்தியாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் தற்போதைக்கு கடல் நீர் திடீரென சிவப்பு நிறமாக மாறியதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அதற்கான ஆய்வுக்காக அப்பிரதேசக் கடற்பரப்பில் உள்ள நீர் எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.