ஆஸ்திரேலியாவில் தந்தை ஒருவர் போன கிழமை  தனது 2 வயது மகளை கொலை செய்து விட்டு, அத்தகவலை பேஸ்புக்கில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தனது மகளை கொலை செய்த தகவலை அவர் தனது முன்னாள் மனைவிக்கு பேஸ்புக் மூலம் அனுப்பி உள்ளார். ரம்ஜான் ரம்ஜி அகர் என்ற அந்த 24 வயது தந்தை, மெல்பேர்ண் கோர்ட்டில் இத்தகவலை வாக்கு மூலமாக அளித்துள்ளார். ரம்ஜானும் அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு யாஸ்மினா என்ற 2 வயது குழந்தை உள்ளது. மனைவி மீது உள்ள ஆத்திரத்தில் குழந்தையை கடத்தி சென்றுள்ளார் ரம்ஜான்.
குழந்தையை திருப்பி தரும்படி ரம்ஜானுக்கு பல முறை அவரது மனைவி போன் செய்துள்ளார். போலீசிற்கு போவதற்கு முன் குழந்தையை கொடுக்கும்படி ரம்ஜானை அவர் எச்சரித்துள்ளார். அதற்கு ரம்ஜான், குழந்தையை கொண்டு விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த குழந்தையின் உடலையும் படம் பிடித்து அதனை பேஸ்புக்கில் பதிவு செய்த ரம்ஜான், அத்தகவலை தனது மனைவிக்கு தகவலாகவும் அனுப்பி உள்ளார். இந்த கொடூர தந்தைக்கு ஜாமீன் வழங்க மெல்பேர்ண் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.