மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட எருவில் எனும் இடத்தில் மதுபானசாலை உரிமையாளர் ஒருவர் மீது சற்று நேரத்திற்கு முன்னர் இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6.45 மணியளவில் நிகழ்ந்துள்ள  இச்சம்பவத்தில் முருகேசு இளங்குமரன் (வயது 35) என்ற வர்த்தகரே படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த இளங்குமரன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த இளங்குமரனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.