தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். இந்த நிலையில் தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்தது. அப்போது இருந்த பரபரப்பான சூழ்நிலையில் திருச்சியில் பலரது செல்போன்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் வடிவேலு பற்றி குசும்பு தகவலை எஸ்.எம்.எஸ். ஆக அனுப்பி இருந்தனர்.
 
காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு, பெயர் வடிவேலு. வயது 40. நிறம் கருப்பு, இடம் மதுரை. இவரை பற்றி தகவல் தெரிந்தால் விஜயகாந்திடம் ஒப்படைக்கவும் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
 
மற்றொரு எஸ்.எம்.எஸ்.சில் காணாமல் போனவர் பற்றி அறிவிப்பு, பெயர் வடிவேலு நிறம் கருப்பு, உயரம் 5 அடி 2 அங்குலம் இப்படிக்கு விஜயகாந்த் என கூறப்பட்டிருந்தது.
 
திருச்சியில் அனைவரது செல்போன்களுக்கும் எஸ்.எம்.எஸ். பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்து, அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தே.மு.தி.க.வினர் செய்த குசும்பு என்று திருச்சி மக்கள் கூறினர்.