வெசாக் தினத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை கைதடி வடக்கு பகுதியில் சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காளை மாட்டினை திருடி இறைச்சிக்காக வெட்டிய ஆறு போரை சாவகச்சேரி காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேறு இடத்தில் திருடிய மாட்டினை வெட்டியமைக்காக நால்வரையும் கொக்குகளை கண்ணி வைத்து பிடித்து இறைச்சிக்காக விற்பனை செய்த இருவரையுமே காவற்துறையினர் கைது செய்துள்ளனர். வெசாக் தினத்திற்கு கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்