தீவகத்திலிருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு ஆண்களின் சடலங்கள், மற்றையது பெண்ணின் சடலம்.

நாரந்தனையில் கடந்த திங்கட்கிழமை சாந்தி ஹெக்ரர் (வயது48) என்ற பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த பெண் அவரது கணவர் கொடுமைப்படுத் தியதால் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டது.
நெடுந்தீவு, முதலாம் வட்டாரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஸ்ரீதரன் (வயது36) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியை கத்தியால் வெட்டிய பின்னர் தூக்கில் தொங்கி இவர் மரணமானார் என்று தெரிவிக்கப்பட்டது.