கல்விச் சுற்றுலா மேற்கொண்டு தொண்டமானாறு செல்வச்சந்நிதிக்குச் சென்ற மாணவர் அங்கு ஆற்றில் நீராடிய வேளை அதில் ஒருவர் மயக்கமடைந்து நீரில் மூழ்கி மூச்சுத்திணறிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

நுவரெலியாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தனர். இவர்கள் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு செல்வச்சந்நிதிக்கு அருகில் உள்ள தொண்டமானாறு ஆற்றில் நீராடினார்கள்.

அப்போது அதில் ஒரு மாணவன் மயக்கமடைந்து நீரில் மூழ்கி மூச்சுத்திணறிய நிலையில் மீட்கப்பட்டு வாகனம் ஒன்றின் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நுவரெலியா, திம்புள்ள பாடசாலையைச் சேர்ந்த பாக்கியநாதன் சிவப்பிரசாந் (வயது 14) என்ற மாணவனே இவ்வாறு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவன் ஆவார்.