ஜப்பானின் கிழக்கு பகுதியில் இன்று காலை 9.46 மணி அளவில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே, நில நடுக்கம் ரிக்டர் அளவு ஸ்கேலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேத மதிப்பு விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.