அதிகாலை போளுதினிலே ஆகாயம் மலர்ந்திருக்க
ஆதவன் வருகயால் அல்லிப்பூ முகம் சுளிக்க
ஆகாய தாமரை அதிசயித்து புன்சிரிக்க
குருவிகளின் கூச்சலும் அருவிகளின் பாச்சலும்
காதினிலே தேன் பருக்க
அழகூட்டும் மின்மினிகள் மேன்மேதுவாய் கண் அயர
மெல்லிளம் தென்றல் வந்து மேனிமேல் உரசிப்போக
இன்ப அலைகள் வந்து இளமனதை மோதிச்செல்ல
கலப்பை கொண்டு உழவர்கள் காட்டுவழி பார்த்துச்செல்ல
கடமை விட்டு சந்திரன் கடலின்கீழ் மறைந்துசெல்ல
கண் குளிரும் காலைநேரம் கவிதை பாடச்சொல்கிறது.