ஐஸ்லாந்தில் இயங்கு நிலையில் இருக்கும் மிக ஆபத்தான எரிமலைகளில் ஒன்றான Grimsvotn நேற்றிரவு (சனிக்கிழமை) வெடித்துள்ளது. அவ் எரிமலையிலிருந்தது வெளிக்கிளம்பியுள்ள புகை மண்டலம் 18,000 அடி உயரத்திற்கு வானத்தில் பரவியுள்ளது.

இதையடுத்து சுற்றிவரவுள்ள சூழலில் 50 சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன. எனினும் 2010 ஏப்ரலில் Eyjafjallajokull எரிமலை வெடித்து, விமான போக்குவரத்தை ஸ்தம்பிதம் செய்யுமளவு புகை கக்கியது போல இம்முறை நிகழாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த எரிமலை கக்கிய புகை 15 கி.மி தூரத்திற்கு மாத்திரமே வானில் பரவுகிறது.

இந்த வருடத்திற்கான மிகப்பெரும் எரிமலை வெடிப்பாக இது இருக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனினும் முன்னர் Eyjafkallajokull எரிமலை வெடிப்பு தாக்கம் கொடுத்த அனுபவத்தை கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளதாக ஐஸ்லாந்து வலய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்லாந்தில் சாதாரனமாக நிகழும் எரிமலை வெடிப்புக்களுக்கு, மத்திய அட்லாண்டிக் பகுதியில், வட அமெரிக்க, ஐரோப்பிய வலய தட்டுக்கள் கடலின் கீழ் அதிர்வடைந்து வெடிப்பை ஏற்படுத்துவது காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை Family Radio எனும் வானொலி சேவையை சேர்ந்த கிறிஸ்தவ முதியவர் தனது கணிப்பின் படி, நேற்று (சனிக்கிழமை) முதல் உலக அழிவுஆரம்பமாகிவிட்டது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.