Siruppiddy Ulkath tamilar onryam

siruppiddy onriyam

சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமானது தனது இறுதி அமர்வில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று எம் ஊர் சமூக ஆர்வலர்களைக் கௌரவிப்பதாகும்.

அதற்கேற்றால் போல் இன்று அமரர் தா .சின்னையா அவர்கள்  அம்மன்பக்தராக அம்மனுக்காகவே பணிபுரிந்துசேவகம் செய்து  அவர் அமரத்துவம் அடைந்து அம்மனடி சேர்ந்து விட்டார்.

ஆனாலும் இன்று இந்த இலுப்பையடி முத்துமாரி அம்மன் ஆலயம் இவ்வளவு பிரகாசமாக மிளிர்ந்திருப்பதர்க்கு அவர் இந்த அம்மனை இலுப்பையின் கீழ் வைத்து ஆதரித்ததென்பதை யாரும் மறந்திருக்க முடியாது. அது மட்டுமல்ல அம்மன் புதுப்பொலிவுடன்  இன்று வீற்றிருக்கிறாள் என்றால் அவர் அன்று அம்மனை ஆதரித்ததால்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது

அன்று அவர் அம்மன்மேல் வைத்த பக்திக்காய் இன்று இந்த அம்மன் ஆலயத்திலேயே அவருக்கானகௌரவம் வளங்கப்பட்டது. அந்த வகையில் சிறுப்பிட்டி உகத்தமிழர் ஒன்றியம் சார்பில் அவர் மூத்த மகளான வினாசித்தம்பி சோதிப்பிள்ளைக்கும் அவரது மூத்தமகனான சுப்பிரமணியத்துக்கும் அவர் தம் தந்தைக்கான கௌரவத்தை  உலகத்தமிழ் ஒன்றியத்தின் ஊருக்கான நிர்வாகக்குழு  ஆலயக்குருவினால் மகிழ்வோடு தா.சின்னையாவுக்கான கௌரம் வளங்கப்பட்டது. அவருக்கான ஓர் ஞாபகார்த்தச் சிலை கூடியவிரைவில் அமைக்கப்படும் என்ற அந்தச் செய்தியையும் உலகத்தமிழ் ஒன்றியம் வழங்கிக் கொள்கிறது.

அத்தோடு பொதுத் தொண்டாற்றியவர்கள் சார்பில் எமது ஊர் பெரியார்கள் இருவர் கௌரவிக்கப்பட்டனர் அதில் திரு.தர்மலிங்கம் அவர்கள் அவர் தன் இளம் வயதில் இருந்து ஆசிரியரா பணியாற்றியதோடு சிறுப்பிட்டி பாடசாலைக்காக தனது  இரண்டுபரப்புக்காணியை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அன்பளிப்பாய் கொடுத்தமைக்காகவும்

 குடும்ப நலத்துக்கான தாய் சேய் நலத்திட்டத்துக்காகவும் இரண்டுபரப்புக்காணி நன்கொடையாக கொடுத்தமைக்காகவும் இன்னும் பல பொது நலத்தொண்டுகள் செய்தமைக்காகவும் அன்றிலிருந்து இன்றுவரை ஓயாது பொதுத்தொண்டுகளை ஆற்றி வருவதர்க்காகவும் இவருக்கான கௌரவம் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் சாப்பில் ஊருக்கான நிர்வாகக்குழுவின் முன்னெடுப்பில் ஆலயக்குருவினால் மகிழ்வோடு இவருக்கான கௌரவத்தோடு ஐம்பது ஆயிரம் ரூபாவையும் கையளிக்கப்பட்டது.

அத்தோடு இளைப்பாறிய ஆசிரியர்  திரு செல்வரத்தினம் அவர்களும் தனித்துவமான பொதுத்தொண்டுகளை இளம்வயதில் இருந்து செய்தமை எம் ஊர்வாழ் உறவுகள் நன்கறியும் அதுட்டுமல்லாமல் குடும்பப் பிரச்சனைகள் காணிப்பிரச்சனைகள் போன்ற பலபிரச்சனைகளை நடுநிலையாக தீர்த்து வைத்தவர் ஆவார். இன்றும் தனது முதுமையையும் பாராது ஊரின் பொதுப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி ஊரின் சிறப்பிற்க்கு தன்னாலான பங்கை ஆற்றி வருகின்றார். இவர் ஆற்றிய  ஆற்றும்,பொதுத் தொண்டுகளுக்காக இந்த வேளையில் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் சார்பில் ஊருக்கான நிர்வாகக்குழு அவருக்கான கௌரவத்தை ஆலயக்குருவினால்  வழங்கி ஐம்பது ஆயிரம் ரூபாவையும் கொடுத்து அக மகிழ்வோடு கௌரவிக்கப் பட்டுள்ளார்.

அத்தோடு இருக்கின்ற போது ஓர் தொண்டாளன் அல்லது பணியாளன் கௌரவிக்கப் படுத்தும் போது நிச்சயம் அவர் வாழ்கின்ற போது பெறும் அளவற்ற மகிழ்வை நாம் நமது சமுதாயம் கண்குளிரக்காணலாம் அத்தகைய பணி புரிந்த இவர்கள் மனம் நிறைவு கண்டதாக மகிழ்வு கொண்டு நின்றதாக அறிந்தோம். அது எமக்கும் மன மகிழ்வினைத்தந்தது

அதானால் நல்லதைச் செய்வோம்

சொன்னதைச் செய்வோம்

என்ற செயல்பாட்டுடன்

சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினரான நாங்கள் எமது ஊரின் செயல்பாட்டுக் குழுவினருக்கும்  முக்கியாக   திரு.ஶ்ரீஸ்கந்தராஜா.திரு.கோடிஸ்வரன். திரு மயூரன் அவர்களும் திறம்பட்ட செயல் பாட்டுக்கும் வாழ்துக்கூறி   பூங்காவனத்தில் இந்த கௌரவிப்புக்காக இடமளித்த திருவிழா உபயகாரர்கள் பாலசிங்கம்-பொன்னம்மா குடும்பத்தினருக்கும்  நன்றிகள். மேலும்  இதற்கான ஒத்துழைப்பு வளங்கிய அனைவருக்கும் உலகத்தமிழர் ஒன்றியம் நன்றியைக் கூறிக்கொள்கிறது. அத்தோடு சிறப்புற தொடர்பாளரார் நிழல் படங்கள் அனுப்பிய மயூரனுக்கும் உலகத்தமிழர் ஒன்றியத்தினரின்   நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

Siruppiddy Ulkath tamilar onryam 3 Siruppiddy Ulkath tamilar onryam 4 Siruppiddy Ulkath tamilar onryam 6 Siruppiddy Ulkath tamilar onryam1 Siruppiddy Ulkath tamilar onryam2

pathivu