kappalஅந்நிய தேசத்தில்…..!
அம்மா என அழைத்தாலும் புரியாத தேசமடா இது…!
நலமா என்று கேட்க நீ
இல்லையென்றாலும்
நான் இன்னும் நலமாக இருக்கின்றேன் அம்மா…
நேற்று முன்தினமா
என்று நினைத்திருக்க நான்
ஆனால் ஆண்டு பல
ஆகிவிட்டது அன்னைமண்ணே உன்னை விட்டு விலகி…!!
எங்கள் வாழ்வு
தண்ணீரோடு கண்ணீராகப் போனாலும் போகட்டும் 
என்று தானே புலம் பெயர்ந்தோம்…!
நாவினை நனைக்க
நீருமின்றி 
பசிபோக்க ஒரு பிடியும் இல்லாமல்
கையிலே ஒரு பையோடு
எங்கள் பயணம்…!!
கொட்டும் மழை, காற்று, புயல் எல்லாம் உரசிப் போனது உயிரோடு…!
இருந்தும் கடல் அன்னை
எங்களை பத்திரமாக
கரை சேர்த்து இருக்கின்றாள்…!
உயிர் பிச்சை போட்டவள் 
நீ தானே கடலம்மா…!!!
„பவளம்“
அருந்தவம் பகீதரன்

amma