kavithaiகலைஞனும் கடவுளும் ஒன்றே
இக்கருத்திற்கு உடன்படாமல்
இருக்கவே முடியாது..
கடவுள் காலத்தை கணிக்கின்றான்
கலைஞன் காலத்தை பிரதிபலிக்கின்றான்
இதுவே உண்மையும் கூட…

ஆக்கவும் முடியும்
அழிக்கவும் முடியும் கடவுளால் என்பார்கள்
அது ஒரு கலைஞனாலும் முடியுமே.
ஏனென்றால் தனது கருத்துகளின் ஊடாக வழிகாட்டியாக நின்று
 சமூகத்தை வளர்த்துக் கொள்கின்றான்.

கலைஞன் கோவில் என்றால் கலைதான் கடவுளே.
ரசிகனாய் வாழலாம் கலைஞனாக வாழ்வதே கடினமான பயணம் தவறான
கருத்துக்களை வெளிப்படுத்தின் சமுகத்தில் கருச்சிதைவே ஏற்படும் எனவே
 கலைஞனாக வாழ்ந்து மற்றவர் வாழவும் வழிகாட்டுவோம்..
ஆனால் ரசிகனாகவே இருக்கவே நான் விரும்புகின்றேன்.
அருந்தவம் பகீதரன்