எமது கிராமத்தில் நடந்த பல்வேறு நிகழ்வின் காரணமாக பிற்போட்டு  வந்த அபிவிருத்தி பணிகள்
ஆரம்பிக்கப்படுகிறது. அதில் நாம் முதலில் எடுத்துக்கொண்ட  வேலையாக மயானம் திகழ்கிறது. அதற்கமைய நேற்று (22-05-2011)
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன் புகைப்படங்களை நீங்கள் காண்கிறீர்கள்.

பின்குறிப்பு;-இதற்க்கு சுவிசில் (சுவிஸ்) வாழும் சிறுப்பிட்டி மேற்கு மக்கள் மட்டுமே பங்களிக்க முடியும். மற்றைய நாட்டினர்
மன்னித்துக்கொள்ளவும் கொஞ்சம் ....பொறுத்துக்கொள்ளவும்.... வேறு பல அபிவிருத்திப்பணிகள் காத்திருக்கின்றது.
நாம் முதல் அறிவித்தது போல ஒன்றன் பின் ஒன்றாகவே எம்மால் நிகழ்த்த முடியும்.உதாரணத்துக்கு 
ஆம் எமது  பூமகள் சனசமூக நிலயம் எத்தனை பேர் சென்று கல்வி பெற்ற இடம் பத்திரிகை வாசித்த இடம் இன்றும் ஒரு அன்பர்
தான் புதினப்பதிரிகை வழங்கலுக்கு பொறுப்பு எடுப்பதாக சொல்லியுள்ளார் இனொருவர் புனரமைக்க உதவுவதாக கேட்டுள்ளார்
அவ் நிர்வாக அமைப்புடன் தொடர்பு கொண்ட பின் உங்களுக்கு அறியத்தரப்படும்.எல்லோரும் சேர்ந்து செய்வோம் அதுவே
சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினரின் செயல் முறை .தொடர்பில் இருங்கள் தொடந்து செய்வோம்.
அன்புடன் :நிர்வாகிகள்