யாழ்தேவி தொடரூந்தை எதிர்வரும் 27 ம் திகதி முதல் ஓமந்தை வரை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையான தொடரூந்து பாதை புனரமைக்கப்பட்ட நிலையில் இந்த சேவை நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 24 ம் திகதியளவில் சீதுவ ஜாஎல இரட்டை தொடரூந்து பாதை திறக்கப்படும் என தொடரூந்து திணைக்கள பொதுமுகாமையாளர் பீ.ஏ.ஆரியரத்ன எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 26 ம் திகதிமுதல் கல்ஓயவிலிருந்து திருகோணமலை வரை வரை ரேல்பஸ் சேவையையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சேவைகளை சிறந்த முறையில் முன்னெடுக்க கூடிய நிலை ஏற்பட்டமை தொடரூந்து திணைக்களத்தின் ஒரு சவால் எட்டப்பட்டமையை குறிப்பதாக பொதுமுகாமையாளர் பீ.ஏ.ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.