மல்லாகம் மகா வித்தியாலயத்தில் தரம் ஏழில் கல்வி கற்கும் மாணவன் நேற்றைய தினம் பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என மாணவனது தாயார் இன்று தெல்லிப்பளை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். 

இந்த மாணவனின் நடத்தை சம்பந்தமாக கதைப்பதற்கு பாடசாலை நிர்வாகம் பாடசாலைக்கு பெற்றோரை அழைத்து வரும்படி கூறினார்கள். அதனைத் தொடர்ந்தே மாணவன் இன்று வரை வீடு திரும்பவில்லை என்று  தெரிய வருகின்றது.