சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தில் 11.06.2014 ஆகிய இன்று தேர்த்திருவிழா பக்தர்கள் கூடி வடம் பிடித்து இழுக்க ஸ்ரீ ஞானவைரவர் வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாயக அமைந்திருந்தது ஊர்கூடி உறவுகள் கூடி பத்தர்கள் கூடி நிற்க சிறப்பாக நடைபெற்றிருந்தது எம் பெருமான் தேர் பவனி அடியார்கள் பிரதட்டை செய்தும் வேண்டுதலை நிறைவேற்றிட சிறப்பாக நிறைவு கண்டுள்ளது. இன்றைய உபயம் செ.சிவசுப்பிரமணியம் அவர்களாக அமைந்திருந்து தகவல்:யுகேந்தன்
தேரில் ஏறி ஸ்ரீ ஞானவைரவர்
வீதி உலா வருகின்றார்
தெய்வமே உன்னை நாடி இங்கே
பத்தர்கள் கூடி வருகின்றார்
ஆடிப்பாடி காவடி கூடி
ஆடியே பத்தர்கள் நாடி வருகின்றார்
அடியவர் குறைகளை
தீர்த்திட வைரவர் வீதி
உலா வருகின்றார்
தீர்த்திட வினைகளை
தீர்திட்டே எங்களின்
தெய்வமாய் காத்துவந்தவா
காவல் தெய்வமாய் வந்தவா