panaimarankalயாழ்.மாவட்டத்தில் பனை வளத்தினை அபிவிருத்தி செய்வதற்கு என 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

திக்கம் வடிசாலை தொடர்பிலான விசேட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டமானது பனை உற்பத்திகளை கொண்ட மாவட்டமாகும். இங்கேயே பல விதமான பனை உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி செய்யக் கூடிய நிலை உள்ளது. எனினும் அவற்றை சரியாக செய்வதற்கு கடந்த காலங்களில் அதற்கான சூழல் இருக்கவில்லை.

எனினும் தற்போது யுத்தம் முடிவடைந்து சமாதான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு ஆக்கபூர்வமான விடயங்கள் வடக்கு மாகாணத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் யாழ். மாவட்டத்தில் உள்ள பனை வளத்தினை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் இந்த ஆண்டு 60 மில்லியன் ரூபா அரசியால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே வளங்களைப் பாதுகாப்பதும் அதனூடாக சிறந்த பயனைப்பெறுவதும் எமது கடமையாகும்.எனவே அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்றும் அவர் மேலும்  தெரிவித்தார்.