SiruppiddyVairavar (146)சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய திருவிழாக்காலமானது  பக்திமயமாக உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும்  நாளளந்தத் தரிசனத்தை நிழல்படங்கள் மூலம் வைரவர் திருவிழாக்காலத்தை ஒவ்வொருநாளும் எமது ஊர் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறோம் அது  ஸ்ரீ ஞானவைரவர் செயலாகும்

 அந்த வகைளில் இன்றைய ஆலய அலங்கார உற்சவத்தில்  தீர்த்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. எம் பெருமானை  பத்தர்ககள்  இணைந்து  தீர்த்தமாட  காவடிகள் துாக்குக்காவடி என  அவர் அவர் தமது நேர்த்திக்காய் நேர்ந்தவற்றை   நிறைவேற்றி  வைரவரை தோள் சுமந்து நிலாவரைக்கு வீதி உலா அழைக்கப்பட்டு புனித தீர்த்த கேணியில் தீர்த்தம் ஆடி  எம்பெருமான்  மீண்டும் திரும்பி இருப்பிடம்  வந்தடை தந்து கொடியுடன்  ஊஞ்சலில் அமர்தி  பாட்டுக்கள் பாடப்பெற்று இனிதே உற்சவம் நிறைவடைந்தது.இன்றைய உபயம்.ந அம்பிகைவாசன்அவர்களினதாக அமைந்திருந்தது  தகவல்:யுகேந்தன்

தீர்தமாட சென்று தெய்வம்
தீர்த்த துயர்கள் கோடி  ஐயா
தெருவில் ஊலாச் சென்று  ஊரின்
துயரம் தீர்த்து  தெய்வம் ஐயா

புனிதம் உன்னால் எமக்கிருக்கு
புவனம் எல்லாம் பேர் இருக்கு
போற்றுதல் போற்றிட நாம் உம்மையே
புண்ணியம் சேரும் வாழ்விருக்கு

காவடி தோள் களில் ஆடிட பக்தர்
கருணையில் பொருளாய் இருப்பவனே
கதிர்வடிவில் ஒளிதந்து
புவனமெல்லாம் காப்பவனே

 மேலதிக புகைப்படங்களை பார்ப்பதற்க்கு இங்கு அழுத்தவும்