யாழ் பல்கலைக்கழகத்தின் புறநிலைப் படிப்புக்கள் அலகினால் மூன்று சான்றிதழ்க் கற்கை நெறிகள் யாழ் பல்கலைக் கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சம்பிராயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
 
புறநிலைப் படிப்புக்கள் அலகின் இணைப்பாளர் பேராசிரியர் கி.விசாகரூபன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொடக்க உரையை யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் வழங்கினார் மனித உரிமைகள், முள்பள்ளிக்கற்கை, ஊடகத்துறை ஆகிய மூன்று கற்கை நெறிகளே புதிதாக ஆரம்பிக்கப்பட்டன.மூன்று மாதக் கல்விக்காலத்தை உடைய இந்தக் கற்கைநெறிகளைக் குறைந்த கட்டணத்தில் தொடரமுடியும் எனவும் பல்கலைக்கழகத்தைச் சமூகமயப்படுத்தலின் ஒர் அங்கமே இந்தக் கற்கைநெறியின் ஆரம்பத்தின் நோக்கம் எனவும்  புறநிலைப் படிப்புக்கள் அலகின் இணைப்பாளர் பேராசிரியர் கி.விசாகரூபன் தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வில் வளவர்களாகிய சமூகவியல் துறைத்தலைவரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான கே.ரி.கணேசலிங்கன், யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சிமைய விரிவுரையாளர் செல்வி.கி.தர்மராஜா,கலாநிதி இராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.