otumai
எதை இங்கு நாம் கண்டோம்…!

வந்தோம் இங்கு
வாழ வந்தோம்….
பேதம் தான்
ஏன் கொண்டோம்…..

ஆண் பெண் பேதம்
எங்கும் இது வாதம்
எங்கே தொலைத்தோம்
எம் சுதந்திரம்…
தொலைந்த இடம் தேடாது
எதை இங்கு நாம் கண்டோம்….!

மதம் பிடித்த யானைகளாய்
மத த்தின் பேரால்
ம மதை கொண்டு
மானிடத்தை அழித்து
எதை இங்கு நாம் கண்டோம்…..!

ஆணவம் வார்த்தைகளில்
ஆதிக்கம் செயல்களில்
அன்பை தொலைத்து
அகந்தை கொண்டு
ஆற றிவு படைத்த நாம்
எதை இங்கு நாம் கண்டோம்…!

ஏழை பணக்காரனென
ஏனிந்த இடைவெளிகள்
அகம்பாவம் கொண்டு
ஆட்டம் போடும்
கூட்டங்களாய்..,,,
எதை இங்கு நாம் கண்டோம்…..!

அன்பெனும் ஆயுதம் கொண்டு
அகிலத்தை மீட்டெடுப்போம்
அன்பாய்ப் பேசுவோம்
ஆதரவாய் கரம் கொடுத்து
எளியோரை முதியோரை
அரவணைப்போம்…..!

ஏற்றத்தாழ்வற்றதோர்
எழில்மிகு சமுதாயம்
எழுச்சியுடன் காண்போம்….,!
எழுந்து வாருங்கள் …….!

***ரதிமோகன்****