siruppiddy onriyamஎமது ஊர் உறவுகள் அனைவருக்கும்  எமது ஊரின் நலன் கருதி உருவாக்கப்பட்ட சிறுப்பிட்டி உலத்தமிழர்  ஒன்றியத்தின் முக்கிய அறிவித்தல்

இந்த ஒன்றியமானது எமது ஊர் நலன்கருதி உருவாக்கப்பட்டது என்பது நீங்கள் அறிந்ததே அதனால் எமது ஊரில் நடக்கும் நல்லவற்றுக்கு  ஆதரவு கொடுப்பது மட்டுமல்ல தீமைகளை கழையவும் இது குரல் கொடுக்கும் என்பது உங்களுக்கும் தெரிந்த உண்மை

 

அதனால் எமது விவசாயக்கிரமத்தின் நீர்வளம் சுரண்டல்பற்றி  முதலும் ஒருமுறை  எமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தோம் அதற்கான பொறுப்புக்குரியவர் திரு.பிரபாகரன்  சிவசுப்பிமணியம் அவர்கள்   இதுவரை தன்னிலையில் மாற்றம் எதையும்  செய்யவில்லை என்பதால்  மீண்டும் அதைப்பற்றி எழுதவேண்டியுள்ளது.  இது  எமது க‌டமை மட்டுமல்ல பொறுப்பும் கூட  மேலும்  எமது ஊர்வாழ் உறவுகளும் இதற்கான விழிப்புணர்வு தேவை என்பது காலத்தின் கட்டாயம்.அதனால் நீங்கள் விழித்தெழுந்து எமது ஊரின் நீர்வளம் காக்கவேண்டியவர்களாக உள்ளீர்கள் என்பதை  நாங்கள் உங்களுக்கு ஞாபப் படுத்துகிறோம்.

 

எமது வழங்களை யார் சுரண்டிநாலும் தட்டடிக்கேட்டு வாழ நீங்கள் முன்வராவிட்டால்  எமது ஊர்மக்களுக்கான நீர்வளம் முற்ரே இழந்து நீங்கள் அடுத்தவர்களிடம் குடிக்கும் நீருக்காக வாழி எடுத்தச் செல்லவேண்டிவரும்   என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

 

 

.அதன் பின்  எமது மண்ணில் எப்படிவிவசாயம்  செய்யமுடியும்…? நீர்வளம் இல்லாமல் மனிதன்வாழ்வது எப்படி.அதனால் விழித்தெளுங்கள்  நீர்வளம்காக்க. அந்த நீர்வளச் சுரண்டலை சிறுப்பிட்டி உலகத்தமிழர்   ஒன்றயமானது முழுமையாக நிறுத்தும்படி  கேட்டுக்கொள்கின்றது.

ஐரோப்பாவில் வாழும் பிரபா அவர்கள் எங்கள் ஊர் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்துக்கும்  உலகவாழ் சிறுப்பிட்டி  உறவுகளுக்கும் உமது நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம் .infosiruppiddy@gmail.com

 

புலம்பெயர் உறவுகளின்சார்பில்  சிறுப்பிட்டி உலகத்தமிழர்  ஒன்றியநிர்வாகம்