s netவாய் உலர்ந்து போகிறது
நா வரண்டு போகிறது….
தாகமாய் இருக்கிறது…..
தண்ணீர் உயிர் தங்கிட தண்ணீர்!!
எத்தனை வலிகளை சுமப்பது…..!!
நச்சுப் புகையின் எச்சங்கள் போகவில்லை நம் உயிர்க்காற்றில்…..

நாம் பருகும் தண்ணீரில்
நச்சுக் கலப்பது
நாம் செய்த பாவமோ?
வரலாற்று துயரமாய் மாறுமுன்னே
வழி விடுங்கள் மனச்சாட்சிகளே!!!!
புட்டிப் பால் கேட்டு அழவில்லை
பசிவந்தும் அழுததில்லை…..!!
பச்சை தண்ணீர் கேட்கும் பாலகர்கள்…………

அழும் குரல் கேட்கிறதா..,…!!
பசி மறந்து ருசி காண்பர்
என் கிணற்று தண்ணீர் போதும்
என்று புன்னகைத்து மனம்
நிறைவர்….
ஒரு குவளை தண்ணீரில்
இந்த ஊரின் வரவேற்பு …..!‘
தொட்டியியே அடைத்து பருகியவர்…..
புட்டியிலே அடைத்த தண்ணீர்
போதுமா..
விலை கொடுத்து வாங்கிடலாகுமோ………!!

                                                                                                  சுபாரஞ்சன்