siruppiddynet (7)

சிறுப்பிட்டி கிராமத்து மக்கள் நலனை    விரும்பும் ஒரு உறவால் கேக்கப்பட்ட இரு கேள்விகள்.
கல்வி கற்க்க வரும் குழந்தைகளின் புகைப்படங்களையும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களையும் புகைப்படங்களாக எடுத்து ஊரின் பெயரில் இணையத்தையும் ஆரம்பித்து பிச்சை எடுப்பதுபோல் பதிவிடுவது படுபாதகச்செயல் .நீர் வியாபாரம் கல்வி வியாபாரமாக்கப்படல் உங்கள் கருத்து??

கேள்வி கேட்ட உறவு திரு ராஜன் அம்பலவாணர்

Cllr Kana Naheerathan:- Dear Vimal,

I saw your message in your face book asking me to comment about your issue between two groups of Sirupiddy village. I don’t have much knowledge about your village but I do know my wife family and I have been Siruppiddy few times. It’s small green village and you all must proud about your village.

I can not understand why few of you clashing each other. If you love your village you should stop all this and come to table for negotiations. I am happy to arrange it for you. I can not say more than this because you all come from same village, you all relative each other, God gave you good life to live in Swiss or UK or any other countries. You have to say thanks to god because as you know many people lost their life in Sri Lanka. But we all lucky having good life in foreign countries.

You all need to do, help your people in Siruppiddy not fight each other. You should not bring personal issue and clashes because it’s will affect your people in your village. Therefore can I ask you stop criticising each other and writing in face book unwanted stories. Let we stand together. Let’s help our village Sirupiddy. Please bear in mind, you have duty to do help your village because you born and grown up there. But your children or next generation wouldn’t help to your village. So while you live in this world please help your village.

On a personal note, I don’t know how to type in Tamil but I hope you all can understand my contributions.

Kind Regards
Nahee

சிறுப்பிட்டி இணையம் தனது நன்றியை   திரு நாஹீ அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றது இதற்க்கான இணைய நிர்வாகத்தின் கருத்தை மிகவிரைவில் உங்களுக்கு தெரிவித்துக்கொள்ளும் நன்றி

இதன் தமிழாக்கம்

நான் உங்கள் முகப்புத்தகத்தில் போட்டப்படுள்ள பதிவைப்பார்த்தேன். சிறுப்பிட்டி கிராமத்தில் இரண்டு குழுக்கள் இடையே உள்ள பிரச்சினை பற்றி எனது கருத்தைக் கேட்டிருந்தீர்கள்.  எனக்கு உங்கள் கிராமத்தைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆனால் எனது மனைவி குடும்பத்தைப் பற்றி தெரியும். அதைவிடவும் நான் சிறுப்பிட்டிக்கு சில முறை வந்துள்ளேன். அது ஒரு சிறிய பச்சைப்பசேல் என்ற கிராமம். நீங்கள் எல்லோரும் உங்கள் கிராமத்தை எண்ணி நிச்சயம் பெருமைப்படவேண்டும்.

நீங்கள் ஒருவருக்கொருவர் ஏன் மோதிக்கொள்கின்றீர்கள் என்று  என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் உங்கள் கிராமத்தை உண்மையிலேயே நேசிக்கிறீர்கள் என்றால் உங்கள் கருத்து வேறுபாடுகள் எல்லாவற்றையும் தூக்கி தூரப் போட்டுவிட்டு ஒன்றாக ஒரு தீர்வை காண்பதற்கு முயற்சிக்க வேண்டும். நான் அதை ஏற்பாடு செய்து கொடுப்பதற்கு சந்தோஷத்துடன் காத்து இருக்கிறேன். நீங்கள் எல்லோரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அதையும்விட எல்லோரும் ஒருவருக்கொருவர் உறவினர்கள். இதை விட என்னால் வேறு எதுவுமே சொல்ல முடியாது. கடவுள் நீங்கள் சுவிஸ் அல்லது இங்கிலாந்து அல்லது வேறு எந்த நாடுகளிலுமோ நல்ல வாழ்க்கை வாழ ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள். காரணம் உங்களுக்கே தெரியும் எத்தனையோ ஆயிரம் மக்கள் இலங்கையில் தமது உயிர்களையும் வாழ்க்கையையும் இழந்து நிற்கதியாக வாழ்கின்றார்கள். ஆனால் நாம் வெளி நாடுகளில் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மிகவும் அதிர்ஷ்டம் பெற்றவர்களாக இருக்கின்றோம்.

நீங்கள் அனைவரும் செய்ய வேண்டியது எல்லாம் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது அல்ல சிறுப்பிட்டியிலுள்ள உங்கள் மக்களுக்கு உதவி செய்வதே. நீங்கள் உங்கள் ஒவ்வொருவரது தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் மோதல்களை அங்கு கொண்டு சென்று திணிக்கக் கூடாது ஏனெனில் இது உங்கள் கிராமத்தில் உங்கள் மக்களைப் பாதிக்கும். எனவே, நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான், முகப் புத்தகத்தில் ஒருவரையொருவர் விமர்சிப்பதையும், தேவையற்ற கருத்துக்கள் எழுதுவதையும் நிறுத்த வேண்டும். முதலில் நாம் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் நிற்போம். நாம் நமது சிறுப்பிட்டி கிராமத்திற்கு உதவிசெய்வோம். ஒன்றை நாம் எல்லோரும் மனதில் உறுதியாக நினைத்துக்கொள்வோம். எம்மை பெற்று வளர்த்தெடுத்த அந்த கிராமத்திற்கு உதவி செய்து முன்னேற்றுவது எம் எல்லோரதும் தலையாய கடமையாகும். ஆனால் உங்கள் குழந்தைகளோ அல்லது அடுத்த தலைமுறையோ உங்கள் கிராமத்திற்கு உதவி செய்வார்கள் என்பதை கற்பனை கூடப் பண்ணிப் பார்க்காதீர்கள். நீங்கள் இந்த உலகத்தில் வாழும் காலத்திலேயே உங்கள் கிராமத்திற்கு உதவுங்கள்.

ஒரு பின் குறிப்பு, தமிழில் எழுதுவது எப்படி என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் என்ன சொல்லவருகின்றேன் என்பது உங்கள் எல்லோருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

மிக்க பணிவன்புடன்
நாஹீ

கேள்வி கேட்ட  உறவின் முழுமையான பதிவை இங்கு பாருங்கள்