s netயாழ்ப்பாணம் சுன்னாகம் மின்சார நிலையக்கழிவு எண்ணெய் அந்தப்பிரதேச கிணற்று நீருடன் கலப்பதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைக் கூடிய நிலையில் இதனை ஏன் தடை செய்யக்கூடாதென்று சர்ச்சைக்குரிய மின் உற்பத்தி நிலையங்களான நொர்தேன் பவர் மற்றும் உதுறு ஜெனி ஆகிய இரண்டு தரப்புக்களிடமும் மல்லாகம் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் கழிவு எண்ணெய் கிணற்று நீருடன் கலப்பதால் நீர் மாசடைவதுடன் தாம் தற்போது பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் இந்த நிலை தொடருமாயின் எதிர்கமலத்தில் பாரிய பிரச்சனை ஏற்படும் என்றும் ஆகவே இதனைத் தடை செய்ய வேண்டுமென்றும் கடந்த வாரம் அப்பகுதி மக்கள் மல்லாகம் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யதிருந்தனர்.)

அதுபோல் நீர்வியாபரம்செய்யும் செய்திகளை சிறுப்பிட் இணையத்தில் பார்த்தும் மிகுந்த கவலையுற்ரேன் எமது சந்ததியின் வாழ்வியலில் அக்கறையற்ற மனிதராய் மற்றவர் வாழ்வை சுரண்டி வாழ்பவர்களே
கண்விழியுங்கள்.

உங்கள் குடும்பம் பணத்தால் நிரம்பி உங்கள் வாழ்கை உல்லாசமாய் இருந்தால்போதும் என்ற நினைப்பை விட்டு உறவுகளில் ஊரில் அன்பு வைத்து பொதுபடச்சிந்தியுங்கள் உங்கள் நிலைமாறும் நின்மதியான வாழ்கைகிட்டும் மாறுங்கள் நீங்களாக மனதில் நிம்மதிமிஞ்சும் மனிதனின் வாழ்வாதரங்களில் கைவையாமல் உழைக்கபலவழி உண்டு
அல்லவா என்ற கவிஞர் வேதா. இலங்காதிலகம்.

கிணற்றுள் நீர் தெளிப்பர்
துடக்கு கழிவதற்கு.
கிணற்று நீர் தெளிப்பர்
முற்றத்துத் தூசியடங்க
கிணற்றுள் எண்ணெய் கசிவது
பெரும் அநியாயம்!
வணக்கத்திற்குரிய நீரால் இன்று
பிணமாவானோ மனிதன்!

சுன்னாகம் சேர்ந்த வடக்கின்
இன்னாப்பு (துன்பம்) அழிய
உன்னிப்பாய் மேலிடத்துக் கவனம்
நன்னயம் செய்யட்டும்!
துன்பத்தின் மேல் துன்பம்
ஏன் தமிழரிற்கு!
சங்காரம் அமைதியாகவா ஏன்!
சன்னதமற்றி சண்டமாருதம்!

நீரின்றி வாழ்தல் கடிது!
நீலித்தனம் இல்லாது
நீரவர் (அறிவுடையார்)போன்று பிரச்சனையை
நீளாது தீர்க்கட்டும்!
நீசத்தனம் மறைந்து அதிகாரம்
நியாயத்துடன் இணையட்டும்!
நிச்சயமான நிதானமானவொரு நற்
பலன் கிடைக்கட்டும்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.