siruppiddypoomakal (2)தற்பொது சிறுப்பிட்டி லண்டன் என்ற பெயருடன் பேஸ்புக்கில் வலம் வரும் பூமகள் நற்பணி மன்ற நிர்வாகதினர் சில தினங்களுக்கு முன்பு பூமகள் சனசமூக நிலையம்,ஞானவைரவர் ஆலயம் மற்றும் எம் ஊர் மக்கள் தொடர்பான கருத்துக்களை அவர்கள் இஸ்ரப்படி தெரிவித்தது மிகவும் வருத்தத்துக்குரியது.
இதில் இவை தொடர்பான கருத்துக்களை முழுமையாக மறுப்பதோடு அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் தொடர்பு சிறுப்பிட்டி மக்கள் அறிந்ததே..!!
பூமகள் நற்பணி மன்றத்தின் ஆரம்ப கலந்துரையாடல் சனசமுக நிலைய மண்டபத்தில் இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளையும் நிர்வாகத்தினர் மேற்கொண்டிருந்தனர் அந்த கலந்துரையாடலின் போது சிறுப்பிட்டி மேற்கில் உள்ள பொது அமைப்புகளையும் உள்வாங்கி செயற்படப் போவதாக தெரிவித்திருந்தனர்.
முதற்கட்டமாக சனசமுக நிலையத்தின் கீழ் இயங்கி வந்த முன்பள்ளி பூமகள் நற்பணி மன்றத்தின் கீழ் நடைபெறத் தொடங்கியது பிற்பாடு அவர்கள் எந்த நிர்வாகத்தையும் உள்வங்காமல் தாமாக செயற்பட ஆரம்பித்துவிட்டனர்.
இருந்தும் கல்வி தொடர்பான செயற்பாடு என்பதால் சனசமூக நிலையத்துக்கு சொந்தமான தளபாடங்கள் மற்றும் சில பொருட்களையும் குடுத்து உதவி எமது ஆதரவையும் வழங்கி இருந்தோம்.siruppiddypoomakal (3)

மேலும் எமது முன்னோர்களால் சனசமுக நிலையம் ஆரம்பிக்கபட்டதில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளுடன் நற்பணி மன்றத்தினர் சேர்ந்து இயங்க தாயர் இல்லை என்பது அப்பட்டமான உண்மை.

இவை இப்படி இருந்தும் ஞானவைரவர் ஆலயம் மற்றும் சனசமூக நிலையத்தின் உடைய செயற்பாடுகள் மற்றும் சிறுப்பிட்டி கிராமத்தினுடைய அன்றாட நடவடிக்கைகள் யாவும் எந்தவித தடைகளும் இன்றி நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது என்பதை யாராலும் மறைக்கவே மறுக்கவே முடியாத…
ஆனால் பூமகள் நற்பணி மன்றத்தினுடைய கருத்தை பார்க்கும் போது இங்குள்ள எந்த அமைப்பும் இயங்கவில்லை சிறுப்பிட்டி கிராமமும் இயங்கவில்லை பூமகள் நற்பணி மன்றம் மட்டுமே இயங்குகின்றது போன்ற தோற்றத்தை காட்ட முனைகின்றனர் .
எனவே இப்படியான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்து எதையும் செயல்வடிவில் செய்வது நன்றாக இருக்கும். அது பூமகள் நற்பணி மன்றமாக  இருந்தாலும் சரி இங்குள்ள எந்த அமைப்பாக இருந்தாலும் சரி…… இலண்டன்  நற்பனி குழுவினர் பேஸ்புக்கில் பரப்பிய செய்தியை பார்க்க இங்கு சொடுக்கவும்siruppiddypoomakalpoomakalSiruppiddy