குடிநீர் நெருக்கடியை மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும் நோக்கத்தோடு மனிதர்கள் என்ற போர்வையில் இருக்கக்கூடிய விசக்கிரிமிகளின் ஈனச் செயலால் 26 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு கடவுள் அல்லது இயற்கை தான் விரைந்து இவர்களுக்கான தண்டனையை வழங்க வேண்டும்; என விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.
விளைநிலத்து நிலத்தடி நீரையும் உயிர் வாழ இயற்கை தந்த குடிநீரையும் வைத்து வியாபாரம் செய்து பிழைக்க மானிடத்தை போத்தல் நீருக்கு வர வைக்கும் ஈனச்செயலா? இந்த குழந்தைகள் குடிக்கும் நீரில் நஞ்சு கலக்கும் மிகவும் கீழ்த்தனமான செயல் ?என்று எண்ண தோன்றுகின்றது.சிறுப்பிட்டி உறவுகளே விழித்தெழுங்கள் நிலத்தடி நீர் வியாபாரம் உங்கள் ஊருக்குள் வந்துவிட்டது வெளிநட்டில் வாழ்ந்து கொண்டு விவசாய பூமியை நாசம் செய்பவருக்கு நியாம் என்னவென்று விளக்கம் கொடுங்கள் இல்லையேல் இல்லை உங்களுக்கான வளமான வாழ்வு..இதற்க்கு ஒரு நாய்ப்பனி மன்றமும் விளம்பரம் செய்கின்றது வில்லங்கங்களை விலை கொடுத்து வாங்குகினம்
என்ன நடக்க போகுதோ தெரியவில்லை…
இன்று ஏழாலை சிறிமுருகள் பாடசாலையில் விசக்கிரிமிகளினால் பாடசாலை நீரில் கலக்கப்பட்ட பூச்சிமருந்தால் 26 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.அப்போது அங்கு விரைந்து வந்த விவசாய அமைச்சர் அவர்களை நேரில் பார்த்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.