neer

 

திண்மமாய் திரவமாய் நீராவியாய்
வகுத்தோமே தண்ணீரே……..
புவியிலே பனியாக வளியிலே
நீராவியாய் வடிவம் கொண்டாயே………

முழுமையிலே முக்கால் பங்காக ஆனாயே பூமியிலே………..
கனிம நீரே மாசற்ற நச்சற்ற
கிருமியற்ற ஊற்றாய் வேண்டும்………

சமுத்திரங்களில் ஆறுகளில்
ஏரிகளில் குளங்களில்
குடிநீர் கிணறுகளில் நீர் பாதுகாப்பு
வேண்டும் உயிர்கள் வாழ நீ வேண்டும்….

ஆவி உயிர்ப்பு பெற்று மழையானாய்
உடற் களைப்பிலே வியர்வையானாய்
உதிரக் கழிவிலே சிறு நீராய்
உள்ளக் கவலையிலே கண்ணீராய்…….

மணமற்ற நிறமற்ற நீர்த்துளியே
ஒளிக்கற்றை ஒன்று பட்டு தெறிக்கையிலே வானவில்லாய்
வர்ணம் கொண்ட வடிவழகாய்…….

என் எண்ணங்கள் ஈரமாய் இன்று
நீர்ச் சுழற்சி இன்றி
நமக்கேது வாழ்வு
தண்ணீரே உனை பாது காப்போம்…..

ஆக்கம் சுபாரஞ்சன்