muthumaiiஉஸ்­பெ­கிஸ்­தானைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் 134 ஆவது வயதில் சில தினங்­க­ளுக்கு முன் கால­மா­ன­தாக கூறப்­ப­டு­கி­றது.

 

டுட்டி யுசு­போவா எனும் இப்பெண் 1880 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி பிறந்­தவர் எனக் கூறப்­ப­டு­கி­றது. உஸ்­பெ­கிஸ்தான் அர­சாங்­கமும் இத்­த­க­வலை ஆத­ரிக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

உலகில் இது­வரை மிக வய­தான பெண்­ணாக கின்னஸ் சாதனை நூல் வெளி­யீட்­டா­ளர்­களால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஜப்­பானைச் சேர்ந்த  மிசாவோ ஒக்­காவா கடந்த புதன்­கி­ழமை தனது 117 ஆவது வயதில் கால­மானார்.muthumai

 

ஆனால், மிசாவோ ஒக்­கா­வாவை விட 17 வரு­டங்கள் மூத்­த­வ­ராக உஸ்­பெ­கிஸ்­தானின் டுட்டி யுசு­போவா உயிர்­வாழ்ந்து இறந்தார் எனக் கூறப்­ப­டு­கி­றது.

 

டுட்டி யுசு­வோபா 1880.07.01 ஆம் திகதி பிறந்­ததை உறு­திப்­ப­டுத்தி அவ­ருக்கு உஸ்­பெ­கிஸ்தான் அர­சாங்கம் கட­வுச்­சீட்டு உட்­பட பல ஆவ­ணங்­க­ளையும் வழங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­க­தக்­கது.

 

இதன்­படி, பிரான்ஸின் ஈபிள்­கோ­பு­ரத்­தை­ விட 8 வரு­டங்கள் மூத்­த­வ­ராக யுசு­போவா வாழ்ந்­துள்ளார்.

 

டுட்டி யுசு­போ­வாவின் மர­ணச்­ச­டங்கில் உஸ்­பெ­கிஸ்­தானின் பிர­பல அர­சி­யல்­வா­திகள் பலரும் பங்­கு­பற்­றி­ய­மையும் அவரின் வயது அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­மைக்­கான அடை­யா­ள­மாக கரு­தப்­ப­டு­கி­றது.

 

உஸ்­பெ­கிஸ்­தானின் கரா­கல்­பக்ஸ்தான் குடி­ய­ரசு எனும் பிராந்­தி­யத்­தைச சேர்ந்­தவர் டுட்டி யுசு­போவா.

 

அக்­கு­டி­யரசின் அமைச்­சர்கள் சபையின் தலை­வரான பக்­ஸதிர் யன்­கி­பயேவ் இது தொடர்­பாக கூறு­கையில், உஸ்­பெ­கிஸ்­தானின் 3 கோடி மக்­களில் சுமார் 8700 பேர் 100 வயதை கடந்­த­வர்கள் எனத் தெரி­வித்­துள்ளார்.

 

கின்னஸ் சாத­னைப்­பதி­வு­க­ளின் ­படி உலகில் மிக அதிக காலம் உயிர்­வாழ்ந்த பெண்­ணா­க அமெ­ரிக்­காவின் ஜெனி கிளெமட் கரு­தப்­ப­டு­கிறார்.

இவர் 1997 ஆம் ஆண்டில் தனது 122 ஆவது வயதில் இறந்தார். தற்போது மிக அதிக வயதான பெண்ணாக அமெரிக்காவைச் சேர்ந்த கேர்ட்ரூட் வீவர் விளங்குகிறார்.

 

ஆர்கன்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் இப் பெண் 116 வயதானவர்.amma