siruppiddy onriyamசிறுப்பிட்டிஉலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினரே  சிறுப்பிட்டி இணையத்தின் கனவை நினைவாகியவர்கள் நீங்கள் உங்களுக்காக ஊர் இணையம் மனப்பூர்வமான நன்றியை முதலில்  தெரிவித்துக்கொள்கின்றது. சிறுப்பிட்டி கிராமத்துக்கு  ஐரோப்பாவில் மட்டும் நான்கு ஒன்றியங்கள் இருந்தாலும் உங்களின் செயற்பாடும்  அதற்க்கான அணுகுமுறையும் அடுத்தவர் எவரேனும் அவதூறு செய்யவோ பிழை பிடிப்பதோ முட்டாள்த்தனத்தின் உச்சக்கட்டமே..

சிறுப்பிட்டி கிராமத்தை ஒன்றிணைக்கவில்லை(ஊர் எப்பவுமே பிரிந்திருக்கவில்லை ) ஆனாலும் ஒன்றிணைந்த நற்பணிகளை செய்யமுன்வந்ததுமட்டுமல்ல செய்து முடித்த பெருமையும் சிறப்பும் உங்களுக்கானதே ஊர் இணையம் உள்மனதுடன் நன்றி பகிர்கின்றது. இணையத்தின் அன்பும் ஆதரவும் என்றும் உங்களுக்கே  அதில் எந்த மாற்றமும் இல்லை.
இருந்தாலும்  ஊர் இணையத்தின்  சில விடை தெரியாத வினாக்களுக்கு நீங்கள் விடை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்  வெளிப்படையாகவே கேள்விகளை  பதிவிட்டு உங்களிடம் இருந்து பதில் வரும் என்ற நம்பிக்கையுடன்   காத்து நிற்கின்றது.

*ஊருக்கு வழங்கப்பட்ட கணனிகள் இன்றைய நிலை ?
*ஊருக்கு உதவிய மூவர் கௌரவிப்பு ?
*ஊரில் உள்ள ஒரு மயானத்தின் புனரமைப்பு ?
*சீ .வை.தாமோதரம்பிள்ளை  சிலை?
இணையத்துக்கு தெரிந்த பதில்கள் இவை

கணனிகள்>> வருடம் இரண்டாகின்றது இதுவரை  செயற்படவில்லை அதற்கான காரணங்களும்  முறையாக தெரிவிக்கப்படவில்லை.
கௌரவிப்பு>>ஒரு அமரத்துவம் அடைந்தவர் உட்பட மூன்று பெரியவர்களை மதிப்பளித்து பெருமைப்படுத்துனீர்கள் அதில் ஒருவர்  பின்னர் அமரரானார் அப்பழுக்கற்ற முன்மாதிரியான ஒரு நிகழ்வு இருந்தாலும் அதிலொருவரின் நினைவுச்சிலை இதுவரை அமைக்கப்படவில்லை.
மயானம்>> புனரமைப்புக்கு  பங்களிக்க  பலர் முன்வந்தும்  இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
சீ.வை .சிலை இது நாற்பது வருடத்துக்கு முற்பட்ட முன்னெடுப்பு இதற்க்கு முடிவு கட்ட முன்வந்த உங்களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. யார்?ஏன் ??

சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினரே இதில்  உங்களின் தவறேதும் இல்லை என்பதினை இணையம் நன்கறியும்  இருந்தாலும் இவை அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருந்து நீங்கள் விலக முடியாது என்பதினை பங்களித்தவர்களின் ஒருவரின் சார்பில் இணையம்  கேட்பதாக நீங்கள்  எடுத்து க்கொண்டால் வெளிப்படையான பதிலை தருவது கட்டாயமானதே என்பதினை தெரிந்திருக்கும் உங்களுக்கு நினைவுபடுதிக்கொள்கின்றது ஊர் இணையம்  என்பதும் புரிந்து விடும்.
பதில் தாருங்கள் ஊர் ஒன்றிய நிர்வாகத்தினரே…

புலத்தில் வாழும் உங்களுக்கு நிலத்தில் வாழும் செயற்ப்பாட்டாளார்கள்  ஒத்துழைப்பு போதவில்லையா ?’ஊரே உங்கள்  பணியை  மதிக்கவில்லையா??

இதற்கான காலத்தை இணையம் உங்களுக்கு தருகின்றது சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தையும் இணைத்து சிறப்பாக செயற்படும் நீங்கள் பதில் தர காலதாமதமானால் இவற்றுக்கான பதில்களையும் ஆதாரத்துடன் இணையமே பதிவிடும் பின்னர் அருகில் இருக்கும் காவல் துறையினரிடம் சென்று  சிறுப்பிட்டி நிலத்தடி நீர் வியாபாரி போல் இணைய நிர்வாகி காதறுக்க பாக்கின்றார்  கழுத்தறுக்க போகின்றார் எனக்கு பயமாக இருக்குது  என்று முறையிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் பதிலுக்காக இணையம் காத்திருக்கின்றது.

சிறுப்பிட்டி என்னும்  ஊரின் பெயரில் ஐரோப்பாவில்  இயக்கப்படும் இணையங்கள் ஒன்றியங்கள் அனைத்தும் இந்த இணையத்தின் நியாய பூர்வமான கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டியது கடமை  ஏனெனில்  பங்களிக்கும் உறவுகளை அவமதிப்பது அந்த உறவின் உயர்வான நோக்கத்தை சீரழிக்க்கும் எவராக இருந்தாலும் உண்மையாக உழைக்கும் இந்த ஊர் இணையப்பார்வையில் இருந்து தப்ப முடியாது.siruppiddynet

இனி இணையமும் சட்ட நடவடிக்கைகளைப்பற்றி யோசிக்கும்