11392895_1595982584016851_8342822747954489618_n

 பிரித்தானியாவில் சாரதிகள் தங்களது சாரதி அனுமதி அட்டையுடன் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டிய காகித அனுமதிச் சீட்டை இனி கொண்டு செல்ல தேவையில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 8 ஆம் திகதி முதல் காகித சாரதி அனுமதிச் சீட்டு முறைமை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

காகித சாரதி அனுமதிச் சீட்டானது சாரதிகளின் தண்டனைப் புள்ளிகள் மற்றும் எவ்விதமான வாகங்களை செலுத்த தகுதியுடைவர்கள் போன்ற விபரங்களை உள்ளடக்கியது.

தற்போது சாரதிகள் தமது சாரதி அனுமதி தொடர்பான விபரங்களை www.gov.uk/view-driving-licence இணையத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும். மேலும் குறியீட்டெண் ஒன்றை அதனூடாக உருவாக்கி பகிர்வதன் மூலமாக 3 ஆந் தரப்பினருடன் விபரங்களை பகிர்ந்துகொள்ளவும் முடியும்.

இக்குறியீட்டெண்ணை தொழில் தருநர் மற்றும் கார் வாடகை நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ள முடியும். இது சாரதிகளால் ஓட்டக்கூடிய வாகனங்கள், தண்டப் புள்ளிகள், சாரதியின் பெயர், சாரதி அனுமதி அட்டையின் கடைசி 8 இலக்கங்கள் போன்ற விபரங்களை மற்றவர்கள் பார்வையிடும் வாய்ப்பை வழங்குகின்றது.

தேவையற்ற காலதாமதங்கள், கெடுபிடிகளை குறைக்கும் பிரித்தானிய அரசின் வேலைத்திட்ட த்தின் ஓர் அங்கமாகவே இப்புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் சாரதி மற்றும் வாகன அனுமதியளித்தல் முகவாரண்மையானது காணாமல் போன சுமார் 445,000 கடதாசி அனுமதிப் பத்திரங்களை மாற்றீடு செய்யவேண்டியிருந்தது. இதற்காக ஒருவரிடம் தலா 20 பவுண்ஸ்கள் அறவிடப்பட்டன.