teeதீ மிதிப்பு வைபவத்தை பார்வையிடச் சென்ற வயோதிபர் ஒருவர், தீக்குழியில் தவறிவிழுந்து படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதடி மத்தியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் வியாழக்கிழமை (27) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த சின்னப்பொடியன் சின்னையா (வயது 64) என்பவரே எரிகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.