neerயாழ். மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் கிறீஸ் மற்றும் காரத்தன்மை அதிகரித்துள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக யாழ். மாவட்ட பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பதிகாரி வசந்தசேகரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று  நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
யாழ். நகரப்பகுதியில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, ஒன்பது குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன. அந்த குடிநீர்ப்போத்தல்களை கொழும்பு அரச பகுப்பாய்வு தினணக்களத்திற்கு பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த பகுப்பாய்வின் அறிக்கையில், 8 குடிநீர்ப் போத்தல்களில் கிறீஸ் மற்றும் காரத்தன்மை அதிகரித்துள்ளதால், அந்த நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.

அந்த அறிக்கையின் பிரகாரம், குறித்த குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அறிவித்துள்ளனர்.அதனடிப்படையில், குடிநீர்ப் போத்தல்களில் கழிவுகள் மற்றும் கிறீஸ் மற்றும் ஒயில், உட்பட காரத்தன்மைகள் அதிகமாக காணப்படுகின்றதாகவும், எனவே குறித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைவாக, குறித்த குடிநீர் போத்தல்களின் பாவனை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு, நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், பொது மக்களை குடிநீர்ப் போத்தல்கள் கலப்படங்கள் மற்றும் கழிவு ஒயில் தன்மைகள் காணப்பட்டால்,  யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் இது தொடர்பில் முறையிடுமாறும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.