thukkuஇரண்டு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் உள்ள மரத்தில் நேற்று  அதிகாலை 5.00 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலம் உறவினர்களினால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
உடுவில் தெற்கு சத்தியபுரத்தைச் சேர்ந்த கிருபாகரமூர்த்தி ராஜநந்தினி 33 (வயது) என்பரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமாரினால் நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட பெண் தனது தந்தை மரணமடைந்தமையால் மன விரக்திக்கு உள்ளாகியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.