நல்லையா சோதிப்பிள்ளை

சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு தற்போது சிறுப்பிட்டி மேற்கில் வாசித்துவந்த நல்லையா சோதிப்பிள்ளை நேற்று {15-06-2011} புதன்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை -தங்கம்மா தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களானகைலாயர் -முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கைலாயர் நல்லையாவின் அன்பு மனைவியும், அருந்தவதேவி, லோகேஸ்வரி, தயாபரன் (சுவிஸ்), ஆகியோரின் அன்புத் தாயும், கோடீஸ்வரன் (தபால் திணைக்களம், கைதடி தபால்நிலையம்), சந்தலிங்கம், திருவேணி (சுவிஸ்), ஆகியோரின் அன்பு மாமியும், யதுஷா, யம்ஷிக, வினோஜன், சாருஜன், தாரங்கன், நிரூபன்(சுவிஸ்), ஆரணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும், கனகலிங்கம், சிவக்கொளுந்து, சுப்பிரமணியம், நாகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சிறுப்பிட்டி மேற்கில், மருமகன் கோடீஸ்வரன் இல்லத்தில் நாளை {17.06.2011} வெள்ளிக்கிழமை மு.ப- 11 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கிந்துசிட்டி இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் எற்றுக்கொள்ளவும்.