kudineerயாழ் மாவட்டத்தில் சுன்னாகம் பகுதி கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பால் பாதிப்படைந்த குடி நீரை குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா? மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களே பதில் கூறுங்கள் எனக்கோரி யாழ்.சுன்னாகம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று நடத்தினர்.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புகளின் ஒழுங்கமைப்பில் குறித்த கவனயீர்ப்பு சுன்னாகம் முனியப்பர் கோவில் முன்றலில் இடம்பெற்றது. வடமாகாண நீர்வழங்கல் அமைச்சு நிபுணர்குழு ஒன்றை உருவாக்கி குறித்த நிபுணர்கள் குழு இறுதி அறிக்கையினை அண்மையில் சமர்ப்பித்திருந்தது.
இந்த அறிக்கையில் சுன்னாகம் நீரில் அச்சுறுத்தும் வகையிலான பார உலோகங்கள் இல்லை எனவும், குடாநாட்டு நீரில் மலக்கிருமிகளின் தாக்கம் உள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.  இந்த அறிக்கை தமக்கு சாதகமாக உருவாக்கபட்டுள்ளது எனவும் சுன்னாகம் குடிதண்ணீரை குடிக்கலாமா? குடிக்க கூடாதா? என்பதை மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்கள் கூறவேண்டும் என வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.neer