இந்த காட்சி பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும். நிலா வான் உச்ச நிலைக்கு வருவதற்கு முன்பே கிரகணம் ஏற்பட தொடங்குவதால் துவக்க நிலை கிரகணத்தை ஐரோப்பியர்கள் பார்க்க முடியாது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

சந்திர கிரகணம் பிரிட்டன் நேரப்படி மாலை 6.24 மணி முதல் நள்ளிரவு வரை நீடித்தது. பிரிட்டனில் சூரிய அஸ்தமனம் இரவு 9.19 மணி வரை நீடித்ததால் கிரகண துவக்கத்தை காண முடிந்தது.பூமியின் நிழல் நிலவில் படிவதால் கிரகணம் ஏற்படுகிறது. சந்திர கிரகணத்தை ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதி மக்கள், மத்திய ஆசியா, மேற்கு அவுஸ்திரேலியா மக்கள் முழுமையாக பார்த்து ரசிக்கலாம். ஆனால் அமெரிக்காவில் சந்திர கிரகணம் அங்கு வெளிச்ச நேரத்தில் நடைபெறுவதால் காண முடியாது.

பொதுவாக சூரிய ஒளி முலம் நிலா பிரகாசம் பெறுகிறது. சந்திரன் எனப்படும் நிலா, பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் உள்ளன. சந்திரகிரகணத்தின் போது பூமி நிழல் முழுவதும் மறைப்பதால் நீலம், சிவப்பு, கறுப்பு, பழுப்பு என ஏதேனும் ஒரு நிலையை பெறுகிறது