denmarkஐரோப்பாவிலேயே மிக கடுமையான விதிகள் என்று நம்பப்படும் அகதிகளுக்கான புதிய விதிகளை அமல்படுத்துவது தொடர்பிலான சர்ச்சைக்குரிய முன்மொழிவுகளுக்கு டென்மார்க் நாடாளுமன்றம் இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய விதிகளின்படி, அகதிகளிடமிடமிருக்கும் ஆயிரத்து நானூறு டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான பொருட்களை எல்லை காவல் துறையினர் கைப்பற்றமுடியும். எனினும் ஒருவரது திருமண மோதிரங்கள் போன்ற உணர்வுபூர்வமான மதிப்பை கொண்ட பொருட்களுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

டென்மார்க் நாட்டு பிரஜைகளே கூட அரசாங்க சலுகைகளை பெறுவதற்கு, தமது விலைமதிப்புயர்ந்த சொத்துக்களை விற்க வேண்டியுள்ளது என்று கூறி தமது நடவடிக்கையை டென்மார்க் அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த அகதிகள் ஒன்றிணைவதையும் இந்த புதிய சட்டம் கடுமையாக்கிவிடும். இது ஐரோப்பிய மனித உரிமை சட்டங்களை மீறுவதான செயல் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.