அவருக்கு 2 வயது ஆன போது உடல் வளர்ச்சி நின்றது. இதன் காரணமாக அவர் ஒரு சிறு குழந்தையைப் போலவே தள்ளாடியபடி நடக்கிறார். மற்றவர்கள் உதவி இல்லாமல் அவரால் நடக்க முடியவில்லை.

உலகின் மிக குள்ள மனிதர் என்ற சாதனையாளராக நேபாளத்தை சேர்ந்த கேந்திரா தான் இருந்தார். அவர் கடந்த அக்டோபர் மாதம் முதல் மிக குள்ள நபர் சாதனைக்கு உரியவராக இருந்தார்.

தற்போது அந்த சாதனையை பாலாவிங் கைப்பற்றி உள்ளார். முந்தைய உலக சாதனையாளரின் உயரத்தை காட்டிலும் பாலாவிங் 7 செ.மீ உயரம் குறைவாகவே உள்ளார். பாலாவிங்கால் நடக்கவோ அல்லது நிற்கவோ முடியாத நிலை உள்ளது. அவருக்கு எப்போதும் உதவி தேவைப்படுகிறது என உறவினர்கள் கூறினார்கள்.

பாலாவிங்கிற்கு நேற்று 18வது பிறந்த நாள் ஆகும். இந்த பிறந்தநாள் விழாவில் மிக உலகின் மிக குள்ளமான சாதனையாளர் விருதை கின்னஸ் அதிகாரி கிரெய்க் கிளன்டே வழங்கினார்.

தெற்கு பிலிப்பைன்சில் உள்ள மின்டனோ தீவின் சின்டன்கன் கிராமத்தில் நடந்த பாராட்டு விழாவின் போது பாலாவிங்கிற்கு கின்னஸ் சான்றிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாலாவிங் தந்தை நன்றி கூறினார். அவருக்கு உள்ள இதர 3 குழந்தைகள் இயல்பான உடல் உயரத்துடன் உள்ளனர்