accidentயாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தூர் பிரதேச சபைக்கு முன்னால் பயணித்துக் கொண்டிருந்த கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து பிரதேச சபையின் மதில் மீது மோதியுள்ளது. இதன்போது, காரில் பயணித்த இரு பெண்களும் படுகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.