மொன்டானா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஹெலனா என்ற நகரத்தில் திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டது.

மின் விநியோகக் கம்பனிக்கு அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புக்கள்.

மின் தடைக்குக் காரணம் என்வென்றே புரியவில்லை. அதிகாரிகள் குழம்பிப் போய்விட்டனர்.

பிறகு மேலே செல்லும் மின் விநியோகக் கம்பியை நோட்டம் விட்டபோது இன்னும் ஆச்சரியமாகிவிட்டது.

மேலே உள்ள அதி சக்தி வாய்ந்த மின் விநியோகக் கம்பியில் ஒரு மான் குட்டி இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது.

அவ்வளவு உயரத்துக்கு மான் குட்டி எப்படிச் சென்றது என்றே தெரியவில்லை. ஒருவேளை அதிசய பறக்கும் மான் குட்டியோ என்றும் சிலர் பேசிக் கொண்டனர்.

பிறகு கிறேன் வழியாக மேலே சென்று மான் குட்டியை கீழே எடுத்து சோதித்தபோது தான் உண்மை தெரியவந்தது.

ஒரு கழுகு இதைக் கவ்விச் சென்ற போது தவறவிட்டுள்ளது. கழுகுக்கு இரையாக வேண்டிய மான் குட்டி மின்சாரக் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தது.