புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் மார்ச் 28ந் திகதி அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 24ந் திகதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்த போது கூட அந்த அறை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் சுமார் 2 1/2 மாதத்துக்குப் பிறகு சாய்பாபா அறையை திறக்க முடிவு செய்யப்பட்டது.

அப்போது குவியல் குவியலாக பணக்கட்டுக்களும், வைரங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வங்கிக்கு எடுத்துச் சென்றனர்.

மேலும் அவற்றின் மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை தற்போது அறிவித்துள்ளனர். அதில் 11.56 கோடி ரூபாய், 98 கிலோ தங்கம் மற்றும் 317 கிலோ வெள்ளி இருந்தாக தெரிவித்தனர்.

புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் மார்ச் 28ந் திகதி அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 24ந் திகதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்த போது கூட அந்த அறை திறக்கப்படவில்லை.