ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து ஆழிப்பேரலை (சுனாமி) உருவாகியுள்ளது. 

8.9 ரிச்டர் அளவில் பூமியதிர்வு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஆழிப்பேரலைகள் உருவாகியுள்ளது.

கட்டிடங்கள், வாகனங்கள், கப்பல்கள் போன்றன அடித்துச் செல்லப்பட்டுள்ளன என அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதன. ஆழிப்பேரலை 10 மீற்றர் உயரத்திற்கு மேலெழுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றன.