puthurபுத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய இராஜேந்திரம் இராஜமகேந்திரன் இன்று 19.02.2016 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்கிய சேவை நயப்புவிழாவைக் கண்டு இளைப்பாறுகை பெற்றார்.
.
எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனது அறுபதாவது அகவை நிறைவைக் கோப்பாயில் உள்ள தனது இல்லத்தில் காணவுள்ள அவர் தனது பணி நிறைவின் வேலை நாள் இன்று ஆகையால் உத்தியோக பூர்வமாகத் தனது பணியை நிறைவு செய்தார்.
.
விஞ்ஞானத்துறை சார்ந்த பட்டதாரிதாரியாகிய அவர் சிறுகதை எழுத்தாளராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். 1992 ஆம் ஆண்டில் அரச பணியில் இணைந்த அவர் தனது அதிபர் சேவையில் பெரும்பங்கு காலத்தை வன்னிப் பெருநிலப்பரப்பிலே ஆற்றியுள்ளார்.
.
புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியில் ஆறு ஆண்டுகள் இவர் அதிபராகச் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஓய்வுக்காலம் சிறக்க வாழ்த்துகின்றேன்.