அபன்பொல காவல்துறை பிரிவில் நேற்று நள்ளிரவு 12.05 அளவில் ரயிலில் மோதுண்டு மூன்று யானைகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீ ஓயா பாலத்திற்கு அருகில் 95ஆவது மைல்கல் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயில் பாதையைக் கடக்க முயன்ற மூன்று யானைகள் அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண் யானைகளும், ஒரு யானைக்குட்டியும் சம்பவத்தில் பலியாகியுள்ளன